”எல்லோரும் பைத்தியமாகிட்டாங்க…” வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் பதிவு.. ஜாபர் சாதிக் காரணமா?

ஜாபர் சாதிக்குடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில், கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Mar 10, 2024 - 17:14
”எல்லோரும் பைத்தியமாகிட்டாங்க…” வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் பதிவு.. ஜாபர் சாதிக் காரணமா?

ஜாபர் சாதிக்குடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில், கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைமறைவான போதைப் பொருள் கடத்தல் மன்னனும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

ஜாபர் சாதிக்கை பொறுத்தவரை அரசியல், சினிமா என பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்த ஜாபர் சாதிக், அக்கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகளுடன் தனிப்பட்ட டீலிங் வைத்திருந்ததாகவும், குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருங்கமான ஒரு நபராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியை அழைத்து தான் தயாரித்த ‘மங்கை’ படத்தின் முதல் பாடலை ஜாபர் சாதிக் வெளியிட வைத்தார் என்கிறார்கள். 

தொடர்ந்து ஜாபருக்கும் கிருத்திகாவிற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகளை அரசியல்கட்சி தலைவர்களை தாண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், சோஷியல் மீடியாக்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்படைவதாகவும், அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்றும் பதிவு ஒன்றை போட்டுள்ளார் கிருத்திகா உதயநிதி. 

கிருத்திகாவின் இந்த பதிவை பார்த்த பலரும், ஜாபருடன் தன்னை தொடர்புப்படுத்தி பேசியதாலேயே அவர் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதற்காக இப்படி ஒரு பதிவை கிருத்திகா போட்டுள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow