சாதிவாரி கணக்கெடுப்பு கேட்பது ஏன்?.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அடுக்கிய காரணங்கள்.. தமிழக அரசு தீர்மானம்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரியான கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்திட வேண்டும் என்று மத்திய அரசை ஒருமனதாக வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டு வருவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த வருகிறது.இதனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒழுங்காக வளர்ச்சி அடைய வழிவகை செய்து அதனை கடைபிடித்து வருகிறோம்.
சமீபகாலமாக சாதி வாரிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் பேசும்போது சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தினை தெரிவித்து இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தும் என்பதை முதலில் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொருள் குறித்து இந்த பேரவைக்கு முழுமையான விவரங்களை எடுத்துரைப்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசால் மக்கள் தொகை கணக்கு சட்டம். அதாவது சென்சஸ் 1948 ன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு மாபெரும் பணி.இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் ஒரு மாபெரும் பணி.
மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் கணக்கு எடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பை சட்டத்தின் பிரிவு 3ன் படி மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
ஆனால் பொதுவெளியில் பரவலாக தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிவர சட்டம் 2008 அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும். இந்த சட்டத்தின் படி மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளி விபரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தவிர இதே சட்டத்தின் பிரிவு 3 உட்பிரிவு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்க இயலாது. அதாவது ஏழாவது அட்டவணையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு 69 ஆவது இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது
அது மட்டுமல்லாமல், இது சட்டத்தின் பிரிவு 35 படி மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை சென்சஸ் டேட்டா சேகரிக்க இயலாது என்று மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பொருள் தொடர்பான தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பொதுவெளியில் சில தவறாக புரிந்து கொள்ளும்படி 2008 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின் கீழ் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாது.சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால் அது மத்திய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும்.எனவேதான் மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 246ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியாளர் மக்கள் தொகை கணக்கெடுப்பினை 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு இதுவரை இன்று வரை காலம் தாழ்த்தி வருவது என்றால் முதல் ஆண்டு கொரோனா பெருந்தொற்றை காரணமாக சொன்னார்கள்.
தற்போது கோவிட் சென்று மூன்று ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தன் கடமையை புறக்கணிக்கும் செயல்.
நான் தொடர்ந்து கோரிக்கை வைப்பது மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 22 - 10 - 2023 பிரதமர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.
அவ்வாறு மத்திய அரசு களப்பணியை மேற்கொள்ளும் போது கிடைக்கப்பெறும் புள்ளிகள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும் சட்டங்களுக்கும் தான் சட்டரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரிப்பது, பின்னர் அதன் அடிப்படையில் சட்டங்களை ஏற்றுவது என்றால் அது பின் ஒரு நாளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.
எனவேதான் இந்த காரணங்களின் அடிப்படையில் ஏற்கனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?