Thalaivar 171: தலைவர் 171 டைட்டில்..? கதையில் செம்ம ட்விஸ்ட்… ரஜினியின் Fan Boy சம்பவம் லோடிங்!
லோகேஷ் இயக்கும் ரஜினியின் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகிறது.
சென்னை: வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, விரைவில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி – லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைவதால் தலைவர் 171 படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகிறது, இதனால் ரஜினி ரசிகர்கள் தலைவரின் வைப் மோடில் உள்ளனர்.
முன்னதாக தலைவர் 171 பற்றி பேசியிருந்த லோகேஷ், இது தனது முந்தைய படங்கள் போல கஞ்சா கடத்தல் பின்னணியில் இருக்காது எனக் கூறியிருந்தார். அதேபோல் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகவில்லை என்பதும் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. இந்நிலையில் தலைவர் 171 படத்தின் கதை பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. லோகேஷ் முதலில் கைதி, லியோ பட பாணியில் ரஜினிக்கு கதை கூறினாராம். ஆனால், ரஜினியோ பக்கா கமர்சியலாக வேண்டும் என சொன்னதால் வேறொரு கதையை கூறியுள்ளார்.
அதாவது ராகவா லாரன்ஸ்காக லோகேஷ் எழுதிய கதையை ரஜினியிடம் சொல்ல, அவரோ உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் தான் ராகவா லாரன்ஸுக்காக லோகேஷ் வேறொரு கதை எழுத, அதுவே தற்போது ‘பென்ஸ்’ என்ற டைட்டிலில் உருவாகவுள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் தலைவர் 171 படத்துக்கு தங்கம், கோல்ட், டிஸ்கோ அல்லது ராணா என இதில் ஒன்று டைட்டிலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் தலைவர் 171 கதை தங்க கடத்தலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஷன் ஜானரில் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக உருவாகவுள்ள தலைவர் 171ல், டோலிவுட் ஹீரோ நாகர்ஜுன் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். தற்போது தனுஷின் குபேரா படத்தில் நடித்து வரும் நாகர்ஜுன், அடுத்து ரஜினியுடன் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரஜினியின் மகள் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
What's Your Reaction?