Thalapathy 69: அட்லீ கூட்டணியில் தளபதி 69... விஜய் ஜோடியாக சமந்தா..? ஹைப் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

விஜய்யின் 69வது படத்தின் இயக்குநர் யார் என்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் தான் தளபதி 69 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அட்லீயின் பெயரும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.

Mar 3, 2024 - 18:09
Thalapathy 69: அட்லீ கூட்டணியில் தளபதி 69... விஜய் ஜோடியாக சமந்தா..? ஹைப் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். திரையுலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும் போது சினிமாவில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேநேரம் விஜய் அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 2026 தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய் அரசியலில் எப்படி ஜொலிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், தனது 69வது படத்துக்கான இயக்குநரை தேர்ந்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் விஜய்யை கடைசியாக இயக்கப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுபற்றி அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் பல புதிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன. விஜய் தனது அரசியல் கட்சியை அறிவிக்கும் முன்னர், தளபதி 69 இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் என செய்திகள் வெளியாகின.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த நாள் முதல், விஜய்யின் தளபதி 69 இயக்குநர் பற்றி பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஷங்கர், வெற்றிமாறன், ஹெச் வினோத், ஆர்ஜே பாலாஜி வரை கோலிவுட்டில் இருந்து பெரிய லிஸ்ட்டே வெளியானது. அதேபோல், டோலிவுட்டில் இருந்து த்ரிவிக்ரமும் தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் இடம்பிடித்தார். அதன்படி தளபதி 69 திரைப்படம் விஜய் - த்ரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் என தகவல்கள் வெளியாகின. மேலும் இந்தப் படத்தை DVV எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இதுதான் விஜய்யின் தளபதி 69 படத்தின் உறுதியான கூட்டணி எனக் கூறப்படும் நிலையில், இப்போது மீண்டும் அட்லீயின் பெயர் அடிபடுகிறது. விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ, மீண்டும் தளபதியுடன் இணைய ஆர்வம் காட்டி வந்தார். கமர்சியல் ப்ளஸ் பொலிட்டிக்கல் பஞ்ச் என விஜய்க்கு மாஸ் காட்டுவதில் அட்லீயின் மேக்கிங் தரமாக இருக்கும். இதனால் தளபதி 69 படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி விஜய், அட்லீ ஆகியோரின் தரப்பில் இருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow