பாகிஸ்தானை விட இந்தியா மோசம் – ராகுல் காந்தி விமர்சனம்!
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரா என்ற பெயரில், நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் 50-வது நாளான இன்று(03.03.2024) மத்திய பிரதேசம் வந்துள்ள அவர், குவாலியூரில் பொதுமக்களிடம் உரையாற்றினர். அப்போது பேசியதாவது, "இந்தியாவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் கொள்கைகளே காரணம். ஏற்கனவே அவரது கொள்கைகளான பணமதீப்பீட்டு இழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் சிறுதொழில்கள் நசிந்து வருகிறது. இந்த சூழலில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வங்கதேசம் மற்றும் பூட்டானை விட இந்தியாவில் வேலையற்ற இளைஞர்கள் அதிகம். பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையின்மை இரு மடங்காக உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் 73 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கூட நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இல்லை. ஆனால், பிரதமர் ஏழை மக்களின் உயர்வுக்காக பணியாற்றுவதாகக் கூறுகிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பொருளாதார நிலையைக் கண்டறிய முடியும்" என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
What's Your Reaction?