மீண்டும் பாக்., பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீப்!!

இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

Mar 3, 2024 - 17:52
மீண்டும் பாக்., பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீப்!!

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கானுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான்கான் அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை அடுத்து, அவர் பிரதமர் பதவியை இழந்தார். மேலும், ஊழல் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதனையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 108 இடங்களையும், இம்ரான்கானின் பிடிஐ கட்சி 93 இடங்களைக் கைப்பற்றியது.  பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களைக் கைப்பற்றியது.

 

இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 336 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில்  201 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். நாளை(04.03.2023)  அவருக்கு அந்நாட்டு ஜனாதிபதி அரீப் அல்வி பதவியேற்பு செய்து வைக்கிறார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அவர் பாகிஸ்தான் பிரதமராகியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow