பாலியல் புகார், பெண் கடத்தல் வழக்கு எதிரொலி.. மஜத எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவை  கைது.. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி

பாலியல் புகார் மற்றும் பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக கைது செய்தனர்.

May 4, 2024 - 21:51
பாலியல் புகார், பெண் கடத்தல் வழக்கு எதிரொலி.. மஜத எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவை  கைது.. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யும், தற்போதைய ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா 300-க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை 2,976 ஆபாச வீடியோக்களாக எடுத்து பென் டிரைவ்வில் வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் பல பெண்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியானதால், அவர் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், இரவோடு இரவாக பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு சென்றார். அவருக்கு பதில் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கறிஞர் ஆஜராகி விசாரணைக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், அவரை இந்திய தூதரகம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடந்த (மே 1) கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணா வீட்டில் 5 வருடங்களாக வேலை பார்த்த பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு நின்றுள்ளார்.

பாலியல் புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்பட்டு வரும் நிலையில் எச்.டி.ரேவண்ணா வீட்டில் வேலை செய்த முன்னாள் பணிப்பெண் கடந்த மாதம் 29ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து பணிப்பெண்ணின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போரில் விசாரணை நடத்திய போலீசார் கலிநலி பகுதியில் உள்ள எச்.டி.ரேவண்ணாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவரது பண்ணை வீட்டில் இருந்து பணிப்பெண் மீட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக எச்.டி.ரேவண்ணா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. 

இந்த நிலையில் கடத்தல் வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி எச்.டி.ரேவண்ணா பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், கடத்தல் வழக்கில் முன்னாள் பிரதமரும், தனது தந்தையுமான எச்.டி. தேவகவுடா வீட்டில் வைத்து எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow