பாபா சித்திக் சுட்டுக்கொலை: கட்சி சார்பாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி  திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.

Oct 13, 2024 - 11:57
பாபா சித்திக் சுட்டுக்கொலை: கட்சி சார்பாக திட்டமிடப்பட்டிருந்த  அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி  திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது மகனின் அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், அவரது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய மூன்றாவது நபரையும் தேடி வருகின்றனர்.    

இந்நிலையில், பாபா சித்திக் கொலைக்கு பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேன உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் பாபா சித்திக் கொலை வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் 
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக சரத்பவார், ஆதித்யா தாக்ரே ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

சம்பவத்திற்கு கண்டனங்களை பதிவு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கொலையில் ஈடுபட்ட நபர்கள் அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேந்தவர்கள் என தெரிவித்தார். மேலும், போலீசார் சார்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் சார்பில் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow