தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
ஏழு கட்டங்களாக நடைபெறும் நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நிறைவு பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் பெரும்பான்மையான இடங்களில் நேற்று மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, ஓரிரு வன்முறை சம்பவங்களை தவிர பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக கூறினார்.
தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது 3.01 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 53.91% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்:
1.தருமபுரி - 81.48%
2.கள்ளக்குறிச்சி - 79.25%
3.கரூர் - 78.61%
4.நாமக்கல் - 78.16%
5.சேலம் - 78.13%
6.பெரம்பலூர் - 77.37%
7.விழுப்புரம் - 76.47%
8.ஆரணி - 75.65%
9.சிதம்பரம் - 75.32%
10.அரக்கோணம் - 74.08%
11.திருவண்ணாமலை - 73.88%
12.வேலூர் - 73.42%
13.கடலூர் - 72.28%
14.நாகை - 71.55%
15.காஞ்சிபுரம் - 71.55%
16.கிருஷ்ணகிரி - 71.31%
17.திண்டுக்கல் - 70.99%
18.நீலகிரி - 70.93%
19.பொள்ளாச்சி - 70.70%
20.திருப்பூர் - 70.58%
21.ஈரோடு - 70.54%
22.விருதுநகர் - 70.17%
23.மயிலாடுதுறை - 70.06%
24.தேனி - 69.87%
25.திருவள்ளூர் - 68.31%
26.ராமநாதபுரம் - 68.18%
27.தஞ்சை - 68.18%
28.தென்காசி - 67.55%
29.திருச்சி - 67.45%
30.கன்னியாகுமரி - 65.46%
31.கோவை - 64.81%
32.நெல்லை - 64.10%
33.சிவகங்கை - 63.94%
34.மதுரை - 61.92%
35.ஸ்ரீபெரும்புதூர் - 60.21%
36.வடசென்னை - 60.13%
37.தூத்துக்குடி - 59.96%
38.தென் சென்னை - 54.27%
39.மத்திய சென்னை - 53.91%
What's Your Reaction?