பாஜக ஆட்சிக்கு வந்தால்... தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம்...

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திரத்தை ஏதேனும் ஒரு வடிவத்தில், மீண்டும் கொண்டு வருவோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

Apr 20, 2024 - 21:32
பாஜக ஆட்சிக்கு வந்தால்... தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம்...

 

தனியார் நாளிதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படைத் தன்மை கொண்டது என்றும், கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கானது எனவும் கூறினார்.

 

 

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என தெரிவித்தார். இந்த முறை, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக, தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு, தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் 2018ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள குடிமகனோ, நிறுவனமோ, தங்களது அடையாளத்தை வெளியிடாமல், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை வழங்கலாம்.

 

 

இதுகுறித்த வழக்கில், இத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், சட்டவிரோதமானது எனவும் கூறிய உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow