கொலை வழக்கில் சிக்கிய சிறுவன்... மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த முயன்றபோது தப்பியோட்டம்..

கொலை வழக்கில் தப்பியோடிய சிறுவனை தேடும் போலீசார்

Apr 27, 2024 - 10:56
கொலை வழக்கில் சிக்கிய சிறுவன்... மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த முயன்றபோது தப்பியோட்டம்..

சென்னை காசிமேட்டில் முன்னாள் ரவுடி தேசிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைக்கச் சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி தேசிங்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 25 ) 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். காசிமேடு மீன்பிடி துறைமுகப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தேசிங்கு மகனுக்கும், ஐந்து பேர் கொண்ட கும்பலுக்கும் முன்விரோதம் இருந்த காரணத்தினால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். 

இதனிடையே கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை, இளைஞர் நீதி குழுமம் கெல்லீஸ் காப்பகத்தில் அடைப்பதற்காக மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த காத்திருந்த நிலையில், போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சிறுவன் தப்பியோடினான். 

இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய சிறுவனை, காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசாரும் தலைமைச் செயலக குடியிருப்பு காலனி போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow