அதிவேகமாகச் சென்ற உயர் ரக பைக்குகள் பறிமுதல் 

அதிக சத்தத்துடன், பொதுமக்களையும், சக வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்ற விலை உயர்ந்த 15 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Oct 14, 2024 - 17:06
அதிவேகமாகச் சென்ற உயர் ரக பைக்குகள் பறிமுதல் 
super bike

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடயூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இருச்சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்று அதன் மூலமாக சாலை விபத்துகளை ஏற்படுத்தி வருவதில் சில உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளன. 

இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தாம்பரம் மாநகரக் காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மொடாக் அவர்களின் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் மற்றும் கேளம்பாக்கம் போக்குவரத்துப் பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் இன்று தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். 

இந்த வாகன சோதனையின் போது அதிக திறன் கொண்ட சுமார் 2 லட்சம் முதல் 19 லட்சம் வரை விலை உயரந்த இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த 15 இருசக்கர வாகங்களை மடக்கிப் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். அதிக சத்தத்துடன், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக கிழக்குக் கட்றகரைச் சாலையில் இருசக்கர வாகனத்தை இயக்கியவர்களைப் பிடித்து அவர்களது விலை உயர்ந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வாகன ஓட்டிகளை கடுமையாக எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் காவல் நிலைய பிணையில் பிடிபட்ட அனைவரையும் விடுவித்த நிலையில், 15 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சாலையில் ரேஸ் செல்வதை இன்றைய இளைஞர்கள் சாகசச் செயலாக நினைக்கின்றனர். அதிவேகமாக சீறிப் பாய்ந்தபடி வாகனம் ஓட்டிச் செல்வதை பெரும் வீரமாகக் கருதுகிறார்கள். இவர்கள் இப்படியாக வாகனம் ஓட்டிச் செல்வது பொதுமக்களை அச்சத்துக்கு ஆளாக்குவதோடு மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து விபத்து ஏற்படக் காரணமாக இருக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதால் போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow