10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம் 

வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் நமது மாணாக்கர்களுக்கு உதவிட, தேசிய அளவிலும் மாநில அளவிலும் 'உதவி மையங்களை' உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம் 
Medical graduates studying abroad go on hunger strike

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் பேசியதாவது: மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட தேசிய மருத்துவ ஆணையமே (NMC) 2022 ஆண்டிலேயே மாவட்ட அரசு மருத்துவமனைகளில் FMG பட்டதாரிகளை பயிற்சி மருத்துவராக பயிற்சி பெறலாம் என்ற அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழக மருத்துவக் கவுன்சில் அதை நடைமுறைப்படுத்தாமல், உள்நோக்கத்தோடு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழக மருத்துவ கவுன்சிலின் இந்தப் போக்கு வண்மையாக கண்டிக்கிறோம்.வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG) தற்காலிக தகுதிச் சான்றிதழ் (PEC Provisional Eligibility Certificate) வழங்குவதில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மிகவும் காலதாமதம் செய்வதை உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகள் பயிற்சி மருத்துவம் பெற, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதன் காரணமாக பல FMG பட்டதாரிகள் பயிற்சி மருத்துவம் மேற்கொண்டனர். அது தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்கல்லூரிகளில், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவம் செய்ய உரிய வகையில் மீண்டும் அனுமதியை வழங்கிட வேண்டும்.வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் நமது மாணாக்கர்களுக்கு உதவிட, தேசிய அளவிலும் மாநில அளவிலும் 'உதவி மையங்களை' உருவாக்கிட வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow