கடத்தல் பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்... அடங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா?
டெல்லியில் சிக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் அளித்த வாக்குமூலத்தில், தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் பின்னணியில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 50 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசாருக்கு, தொடர் கடத்தலில் இந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி, விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.
கைதான 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்த போலீசார் , போதைப்பொருளை தேங்காய் பொடியுடன் சேர்த்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியதை தெரிந்துக் கொண்டனர். இந்த கடத்தல் பின்னணியில், தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் அம்பலமானது. ஜாபர் சித்திக், மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கும் 'மங்கை' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அதே போல், 'இறைவன் மிகப் பெரியவன்' என்கிற படத்தில் கதாநாயகனாக மைதீன் நடித்திருக்கிறார்.
இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருட்களை கடத்தி, அதன் மூலம் ரூ.2,000 கோடி சம்பாதித்ததும் விசாரணையில் அம்பலமானது. மிகப் பெரிய கடத்தல் சம்பவத்தில் தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் சிக்கியிருப்பது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?