‘பராசக்தி’ திரைப்படம் பிப்ரவரி 7-ல் ஓடிடியில் ரிலீஸ்
சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் பிப்ரவரி 7-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, இந்தி எதிர்ப்பை மையமாக வை்து இந்த உருவாக்கப்பட்டு இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் திரையுலகில் பராசக்தி ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.
வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் 28 நாட்களுக்குள் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவது வழக்கம். பராசக்தியை 48 நாட்கள் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், படம் பிப்ரவரி மாத இறுதியில் தான் ஓடிடிக்கு வரும் என கருதப்பட்டது.
ஆனால் தற்போது அப்படம் முன்கூட்டியே ஓடிடிக்கு வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி பராசக்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 (ZEE5) தளம் கைப்பற்றியுள்ளது. அதனால் திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள், அல்லது மீண்டும் படம் பார்க்க விரும்புபவர்கள், பிப்ரவரி 7 முதல் ஜீ5-ல் பராசக்தியை பார்த்து ரசிக்கலாம்.
What's Your Reaction?

