இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்… எந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம்… ரசிகர்களின் சாய்ஸ் இதுதான்!

இந்த வாரம் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியான படங்களில் ரசிகர்களின் சாய்ஸ் எதுவென இப்போது பார்க்கலாம்.

Mar 8, 2024 - 12:27
இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்… எந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம்… ரசிகர்களின் சாய்ஸ் இதுதான்!

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக மலையாள படங்களின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ் என வரிசையாக ஹிட் மேல் ஹிட் கொடுத்து அசத்தியது மல்லுவுட். இந்நிலையில் இந்த வாரம் தமிழில் மொத்தம் 6 படங்கள் வெளியாகியுள்ளன. இவையனைத்துமே மினிமம் பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஊர்வசி, அட்டக்கத்தி தினேஷ், மாறன் நடித்துள்ள ஜே பேபி படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.  

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள ஜே பேபி படத்தை, சுரேஷ் மாரி என்பவர் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குநரான சுரேஷ் மாரி, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கமெடி ப்ளஸ் எமோஷனல் படமாக வெளியான ஜே பேபி, இந்த வாரம் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதனையடுத்து அரிமாபட்டி சக்திவேல் படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. மேகா எலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் கந்தசாமி என்பவர் இயக்கியுள்ளார். அதேபோல், ஹன்ஸிகா லீடிங் ரோலில் நடித்துள்ள கார்டியன் திரைப்படமும் இந்த வாரம் வெளியாகியுள்ளது. குரு சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

இந்த வரிசையில் ஷில்பா மஞ்சுநாத், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள சிங்கப்பெண்ணே திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. சிங்கப்பெண்ணே படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். மேலும், டெவில் ஹண்டர்ஸ், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற படங்களும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இதில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படம் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு வீக் என்ட் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow