உச்சம் தொடும் தங்க விலை... தொடர்ந்து விலை உயர்வு...
நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்க விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருப்பதாலும், சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 20 நாட்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது.
அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.48,320-ஆகவும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040-ஆகவும் விற்பனை ஆகிறது. 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,510-ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.52,080-ஆகவும் விற்பனையாகிறது.
ஆனால் வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.78-ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.200 குறைந்து ரூ.78,000-ஆகவும் விற்பனையாகிறது.
What's Your Reaction?