என்னம்மா இப்படி பண்றீங்களம்மா! தங்கம் சவரனுக்கு ரூ.2.240 உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி 

தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

என்னம்மா இப்படி பண்றீங்களம்மா! தங்கம் சவரனுக்கு ரூ.2.240 உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி 
தங்கம் சவரனுக்கு ரூ.2.240 உயர்வு

தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்பட்டது.தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை உயர்வை கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. கிலோ வெள்ளி ரூ 12 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,87,000 விற்பனை ஆனது. 

இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையனது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு  ரூ.2,240  உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளியை பொறுத்தவரை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆனது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow