அப்பா-மகன் சண்டையால் வந்த வினை : மாம்பழம் சின்னம் முடக்கப்படும் தேர்தல் ஆணையம் 

அப்பா, மகன் சண்டையால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என தேர்தல் ஆணையம் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அப்பா-மகன் சண்டையால் வந்த வினை : மாம்பழம் சின்னம் முடக்கப்படும் தேர்தல் ஆணையம் 
Election Commission bans mango symbol

பாமக தலைவர் அன்புமணி என்றும், வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடி கொள்ளும்படி தேர்தல் ஆணையம் ராமதாசு தரப்புக்கு அறிவுறுத்தியது.  தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛ராமதாஸ் தான் கட்சியை நிறுவினார். கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். போலி ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் தலைவராக அங்கீகரித்துள்ளது.

இதனை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்ற வாதத்தை முன்வைத்தனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 

‛‛கட்சியின் பொதுக்குழு அன்புமணி ராமதாஸை கட்சி தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அன்புமணியை கட்சியின் தலைவராக அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானது தான்'' என்று வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில், ‛‛பாமகவில் தற்போது தலைமை பிரச்சனை உள்ளது. இதனால் கட்சியின் சின்னமான மாம்பழத்தை யாருக்கும் ஒதுக்க முடியாது. அன்புமணி தரப்புக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ இந்த சின்னத்தை வழங்க முடியாது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும். இதனால் பாமகவிற்கு சின்னம் ஒதுக்க முடியாது'' என்று பதிலளிக்கப்பட்டது. 

மேலும் ராமதாசு தரப்பை சிவில் நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டுள்ளது ராமதாசு, அன்புமணி ஆதரவாளர்களை அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow