திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பெய்த கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணியில் கடந்த 5 ஆம் தேதி திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி மலைக் கோயிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் 20 அடி தூரத்திற்கு சாலை தடுப்பு சுவர்களும் இடிந்தது.இதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முருகன் கோயிலுக்கு அனைத்து வாகனங்கள் தடைவித்துள்ளது திருக்கோயில் நிர்வாகம்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்து வாகனங்களும் மலை அடிவாரத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
What's Your Reaction?