‘வருங்கால மனைவிக்காக நகைகளை அபேஸ் செய்த ’விக்’ திருடன்

வரப்போகும் மனைவிக்கு நகைகள் போட்டு அழகு பார்க்க ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக  நூதன விளக்கம் அளித்துள்ளார்.

Dec 27, 2023 - 13:43
Dec 27, 2023 - 17:30
‘வருங்கால மனைவிக்காக நகைகளை அபேஸ் செய்த ’விக்’ திருடன்

திருமணம் செய்து கொண்டால் மனைவிக்கு நகை போட்டு அழகு பார்க்க நினைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்ட ‘விக்’திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பி45 எண் கொண்ட வீட்டில் கீதா என்பவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.வல்லம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கீதா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் 20ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு கீதாவும், அவரது மகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

மாலை வீடு திரும்பிய தாயும், மகளும் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டி இருந்த வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, ஹால் இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.மேலும் பீரோ லாக்கரில் வைத்து இருந்த 50 சவரன் தங்க நகைகள், ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக ஆசிரியை கீதா கொடுத்த புகாரின்பேரில்  காவல்துறையினர் வழக்குப்பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகரில் வசித்து வரும் 39 வயதான வெங்கடேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை. நகை, பணம் சேமித்து வைத்தால் பெண் கொடுப்பார்கள். வரப்போகும் மனைவிக்கு நகைகள் போட்டு அழகு பார்க்க ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக  நூதன விளக்கம் அளித்துள்ளார்.

தலையில் விக்கு வைத்துக்கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட செகண்ட் அட்டம்ட்டிலேயே வெங்கடேசன் பரிதாபமாக காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow