சிதம்பரம்: ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தேர் திருவிழா வரும் 26- ம் தேதி, மார்கழி ஆருத்ரா தரிசன விழா 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Dec 18, 2023 - 13:24
Dec 18, 2023 - 15:55
சிதம்பரம்: ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்த 2 விழாக்களின்போது மட்டும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மாள் சுவாமிகள் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு. இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

தீட்சிதர்கள் மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசம் பாடி கொயேற்றினார்.தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். இதில் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 26- ம் தேதி, மார்கழி ஆருத்ரா தரிசன விழா 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணிமுதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், சித் சபை பிரவேசமும் நடக்கிறது. 28-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow