மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு
இன்னும் இரண்டு தினங்களில் தேங்கியுள்ள மழை நீரை முழுவதும் அகற்றப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி அதிக திறன் கொண்ட மின்மோட்டோர்களை வைத்து நீரை அகற்ற உத்தரவிட்டார்.
கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பூந்தமல்லி ஒன்றியம் நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யமுனா நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் இன்னும் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்களுக்காக மீனவத்துறை சார்பில் படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் படகு மூலம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மழைநீரை விரைந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் யமுனா நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அதிக திறன் கொண்ட ஐந்துக்கும் மேற்பட்ட நீர்மூழ்கி மின்மோட்டார்களை வைத்து தேங்கி உள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிக திறன் கொண்ட கூடுதல் மின்மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு தினங்களில் தேங்கியுள்ள மழை நீரை முழுவதும் அகற்றப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?