வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21ந்தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும்.

Dec 11, 2023 - 14:47
Dec 11, 2023 - 15:28
வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21ந்தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் முன்பு 21ந்தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் தொடர்ந்து கிடைக்காததால் சம்பா சாகுபடி பொய்த்துவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும்.

‘காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே காவிரி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுப்பதை அனுமதிக்க கூடாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஏரி, மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow