குழித்துறை: இருசக்கர வாகனம் பால்வண்டி மீது மோதி இருவர் பலி
இது குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழித்துறை அருகே இருசக்கர வாகனம் பால்வண்டி மீது மோதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின்(19).கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார்.அதே ஊரை சேர்ந்த வினித் ( 20) பிளம்பிங் வேலைக்கு சென்று வந்தார்.
நண்பர்களான இரண்டு பேரும் நேற்று இரவு வினித்திற்கு செல்போன் வாங்குவதற்காக விபினின் பைக்கில் காப்பிக்காடு ஜங்ஷனில் உள்ள ஒரு கடைக்கு வந்துள்ளனர். அங்கு புது செல்போன் ஆர்டர் செய்துவிட்டு குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர்.
பைக் குழித்துறை ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது எதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ ஒன்று வேகமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களும் சாலையில் தூக்கி விசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் துடிதுடித்தனர்.சில நிமிடங்களில் விபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வினித்தை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பினர்.அந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக குழித்துறை பகுதியில் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இரண்டு வாலிபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?