This Week OTT Release: அரண்மனை 4, ரசவாதி, சிங்கப் பெண்ணே... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Jun 20, 2024 - 17:34
This Week OTT Release: அரண்மனை 4, ரசவாதி, சிங்கப் பெண்ணே... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

சென்னை: ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த அரண்மனை 4, மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காமெடி ப்ளஸ் ஹாரர் ஜானரில் உருவாகியிருந்த அரண்மனை 4, பாசிட்டிவான விமர்சனங்களுடன் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்நிலையில், இந்தப் படம் வரும் 21ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனால் தியேட்டரில் அரண்மனை 4 படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் கண்டு ரசிக்க ரெடியாகிவிட்டனர்.

அரண்மனை 4 வரிசையில் ரசவாதி திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை சாந்தகுமார் இயக்கியிருந்தார். க்ரைம் ப்ளஸ் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ரசவாதி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல் அர்ஜுன் தாஸ், சுஜித் சங்கரின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது. மெளனகுரு, மகாமுனி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சாந்தகுமார், ரசவாதி படத்திலும் தனது முத்திரையை பதித்திருந்தார். இந்தப் படம் வரும் 21ம் தேதி அமேசான் ப்ரைம், ஆஹா தமிழ் என இரண்டு ஓடிடி தளங்களிலும் வெளியாகிறது. 

தமிழில் சிங்கப் பெண்ணே என்ற திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சதீஷ் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படம், அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள நடிகர் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஜீன் பால் லால் இயக்கத்தில் மே 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான நடிகர் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற நடிகர், இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இப்படத்தில் டொவினோ தாமஸ் உடன் திவ்யா பிள்ளை, பாவனா, செளபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், ஃபஹத் பாசில் நடிப்பில் ஹிட்டான ஆவேசம் படத்தின் தமிழ் வெர்ஷன் இந்த வாரம் அமேசானில் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் ராதா மாதவன், கம் கம் கணேஷா என்ற இரு படங்களும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகின்றன. அதேபோல் ஜல்பந்தி என்ற பெங்காலி திரைப்படம் ஜீ5 தளத்திலும், ஃபுலேகு (Fuleku) என்ற குஜராத்தி மூவி அமேசான் ப்ரைமிலும் இந்த வாரம் வெளியாகின்றன. மேலும் பேட் காப் (Bad Cop) என்ற இந்தி வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. ஆங்கிலத்தில் ட்ரிக்கர் வார்னிங் (Trigger Warning) என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் Inheritance என்ற திரைப்படமும், Gangs of Galicia என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸும் ரிலீஸாகின்றன. அதேபோல், சைனீஷ் வெப் சீரிஸ்ஸான The Victims Game சீசன் 2 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

அமேசான் ப்ரைமில் Love My Scent, Mouse S1 என்ற கொரியன் வெப் சீரிஸ்கள் இந்த வாரம் வெளியாகின்றன. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் My Name Is Gabriel என்ற வெப் சீரிஸ் வெளியாகிறது. ஆகமொத்தம் இந்த வாரம் சூப்பர் ஹிட் படங்கள், வெப் சீரிஸ்கள் என ஓடிடி ரசிகர்களுக்கு வெரைட்டியான ட்ரீட் வெயிட்டிங்கில் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow