விஜய்க்காக.. இப்படியும் ஒரு ரசிகர்... 10,000 வரிகளில் கவிதை.. அடடே சூப்பர்...!

அபிமான நடிகர்களை தலைவனாக எண்ணி, ஏதேதோ செய்யத் துணியும் ரசிகர்கள் மத்தியில், திருப்பத்தூரில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Apr 20, 2024 - 19:44
Apr 20, 2024 - 19:53
விஜய்க்காக.. இப்படியும் ஒரு ரசிகர்... 10,000 வரிகளில் கவிதை.. அடடே சூப்பர்...!

தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கும் இந்த படம், முதல் நாள் வசூலிலும் அதிரடி காட்டி இருக்கிறது.

இப்படி.. கில்லி படம் மீண்டும் சக்கப்போடு போட குஷியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ஆர்வத்தில் ஏதேதோ செய்து வருகின்றனர். அப்படி, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜடையனூர் பகுதியை சேர்ந்த என்பவர் கதிர்வேல். தீவிர விஜய் ரசிகரான இவர், கில்லி ரீ ரிலீஸை ஓட்டி விஜய்-ஐ பற்றி, 36 மணிநேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை எழுதி சாதனை படைத்திருக்கிறார். 

இவரின் இந்த சாதனையை கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறது. விஜய்யின் மீது தான் கொண்ட அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தவே இந்த கவிதையை எழுதியிருப்பதாக அந்த ரசிகர் நெகிழ்ச்சியாக கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow