காடுவெட்டி முதல் யாவரும் வல்லவரே வரை… இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ!

வார இறுதிநாளான இன்று திரையரங்குகளில் வெளியான படங்கள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Mar 15, 2024 - 12:11
Mar 15, 2024 - 14:15
காடுவெட்டி முதல் யாவரும் வல்லவரே வரை… இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ!

மார்ச் 15ம் தேதியான இன்று திரையரங்குகளில் 7க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. மஞ்சும்மல் பாய்ஸ் ஃபீவர் இன்னும் குறையாத நிலையில், இன்னொரு மலையாள படமான பிரேமலு தமிழ் டப்பிங் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத் பின்னணியில் நடக்கும் காதல் கதையான பிரேமலு, ஏற்கனவே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரேமலு தமிழ் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.  

தமிழில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள அமிகோ கரேஜ் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையான அமிகோ கரேஜ் மாஸ்டர் மகேந்திரனுக்கு கம்பேக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல், நாடக காதல் எதிர்ப்பு, ஜாதி பிரச்னைகளை சொல்லும் காடுவெட்டி திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆர்.கே சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ராஜேந்திரன் சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.    

மேலும், சமுத்திரக்கனி நடித்துள்ள யாவரும் வல்லவரே படமும் இந்த வாரம் ரிலீஸாகியுள்ளது. ஹைப்பர் லிங்க் கதையான யாவரும் வல்லவரே கோலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அனிஷ், முத்து ப்ரியன், மனிஷாஜித் நடித்துள்ள ஆராய்ச்சி, டெவில் ஹன்டர்ஸ், இந்தியில் பஸ்தர் ஆகிய படங்களும் இந்த வாரம் வெளியாகியுள்ளன.  

இந்த வரிசையில் இந்தியில் இருந்து பஸ்தர் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நக்சல் தாக்குதலால் பல ஜவான்கள் கொல்லப்பட, அவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கப்படுகிறது. நக்சல் தாக்கத்தால் சில மாநிலங்களில் அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்தப் படம். அதேபோல், தெலுங்கில் ரசாக்கர் என்ற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இது 1948ம் ஆண்டு நடைபெற்ற ஐதராபாத் சுதந்திர போராட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow