Suchi Leaks: “Gay-ஆ இருந்தா பெருமை தான்..?” சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!

தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என பாடகி சுசித்ரா கூறியிருந்தார். இதனையடுத்து சுசித்ராவுக்கு பகிரங்கமாக பதிலடி கொடுத்துள்ளார் கார்த்திக் குமார்.

May 14, 2024 - 18:29
Suchi Leaks: “Gay-ஆ இருந்தா பெருமை தான்..?” சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!

சென்னை: அலைபாயுதே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக் குமார். தொடர்ந்து யுவா, கண்ட நாள் முதல், தனுஷுடன் யாரடி நீ மோகினி, தெய்வ திருமகள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பாடகி சுசித்ராவுக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் 2017ல் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு சுச்சி லீக்ஸ் என்ற சம்பவம் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதாவது சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் சில நடிகைகளில் ஆபாச படங்கள் வெளியாகி வைரலானது. அதனால் தான் சுசித்ராவை கார்த்திக் குமார் விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த சுசித்ரா, ‘சுச்சி லீக்ஸ்’ சம்பவம் குறித்தும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ் ஆகியோர் பற்றியும் கொளுத்திப் போட்டார். அதாவது, தனுஷ், கார்த்திக் குமார் இடையே தவறான உறவு இருப்பதாகக் கூறியிருந்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், தனுஷும் கார்த்திக் குமாரும் Gay  என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சுசித்ராவின் இந்த பேட்டி வைரலான நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கார்த்திக் குமார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ள கார்த்திக் குமார், நான் Gay-ஆக இருந்தால் அதனை வெளியே சொல்ல தயக்கம் கிடையாது. அதற்காக அசிங்கப்படவும் அவசியம் இல்லை, எந்த இடத்திலும் இன்னொருவரை கஷ்டப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. சென்னையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்கும் பிரைட் மார்க் நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வேன். தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு சப்போர்ட் செய்வதால் நான் Gay என்று எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை நான் Gay ஆக இருந்தால் அதனை ஓபனாக ஒப்புக்கொள்வேன் என அதிரடியாகக் கூறியுள்ளார்.

சுச்சியின் பேட்டியை தொடர்ந்து கார்த்திக் குமாரும் அதிரடியாக வீடியோ வெளியிட்டுள்ளது கோலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் என்னென்ன சம்பவங்கள் வெளிவர போகிறதோ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow