கூலி கெட்டப்பில் ரஜினி... ”தலைவரே இது பேட்ட லுக் மாதிரி இருக்குதே..” ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

Jul 8, 2024 - 15:14
கூலி கெட்டப்பில் ரஜினி... ”தலைவரே இது பேட்ட லுக் மாதிரி இருக்குதே..” ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
கூலி கெட்டப்பில் ரஜினி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த வாரம் ரஜினி ஐதராபாத் சென்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான ரஜினியின் போட்டோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அவர் அபுதாபி சென்றிருந்த போது அங்கு கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்குச் சென்றிருந்தார்.  

அதேபோல், ஐதராபாத்திலும் சுவாமி நாராயணன் மந்திர் என்ற கோயில் உள்ளது. அக்கோயிலைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ரஜினியை சந்தித்து புகைப்படம் ஒன்றை பரிசளித்துள்ளார். அதனை ரஜினி பெற்றுக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. அதற்கான காரணம் ரஜினி கூலி படத்தின் கெட்டப்பில் செம மாஸ்ஸாக இருப்பதுதான். கூலி படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, ரஜினியின் ஹேர் ஸ்டைலை மாற்றி அவரது புதிய லுக்கை வெளியிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்போது ரஜினியின் லுக் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். 

ஆனால், தற்போது வெளியான போட்டோவை பார்த்தால், பேட்ட படத்தில் வரும் ரஜினி லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும், ரஜினியின் லுக் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் இருந்தது. கூலி படம் முழுக்க ரஜினி இதே ஹேர் ஸ்டைலில் தான் வலம் வருவார் என சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் எப்போதும் தனது கெட்டப்பை மாற்றி நடிப்பதில்லை. ஸ்டைல் தான் அவரது கிளாஸ் & மாஸ் என்பதால், கூலி படத்தின் கெட்டப் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என ரஜினியின் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். 

இதனிடையே கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதன்படி, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பது கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர ராகவா லாரன்ஸ், ஃபஹத் பாசில், ரன்வீர் சிங், சாண்டி மாஸ்டர், விஜய் சேதுபதி போன்ற லீடிங் ஹீரோக்களும் கூலி படத்தில் கமிட்டாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அப்டேட்கள் எல்லாம் அடுத்த வாரம் முதல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow