கூர்ந்து கவனித்து வருகிறோம்... சிஏஏ குறித்து அமெரிக்கா கருத்து!
குடியுரிமை திருத்த சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான விதிமுறைகள் வகுப்பட்டு, கடந்த மார்ச் 11ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் உட்பட அந்த நாடுகளை சேர்ந்த சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகவும், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க செய்தித்தொடர்பாளர் மேத்யூவ் மில்லரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதுகுறித்து அமெரிக்கா கவனமுடன் இருப்பதாகவும், இந்தியா இந்த சடத்தை எப்படி அமல்படுத்துகிறது என்பதை கூர்ந்து கவனித்து வருவதாக” தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?