திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : மலை உச்சியில் மகாதீப கொப்பரை- லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்பட்ட உள்ளது. மலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு கொண்டு செல்லப்பட்டது. தீப தரிசனம் செய்ய லட்சகணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் வண்ண விளக்குகள், மலர் அலங்காரங்களால் கயிலாயம் போல காட்சியளிக்கிறது. மகா தீபத்திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையிலள் குவிந்துள்ளனர்.
நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மகாதீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ முதல் தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு, திருக்கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரம் கொண்ட செப்பினால் உருவான மகா தீப கொப்பரை வண்ணம் தீட்டப்பட்டு, இன்று அதிகாலை மலை உச்சக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?

