லண்டனில் லலித் மோடி பிறந்தநாள் : விஜய் மல்லையா கூத்தாட்டம் - வைரலாகும் வீடியோ
லண்டனில் கூத்தாட்டம் போட்ட லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பணமோசடி வழக்கில் தண்டனையில் இருந்து தப்பிக்க லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனில் அண்மையில் மிகபிரமாண்டமாக கொண்டாடி உள்ளார்.கடந்த வார இறுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்தில் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டு உள்ளார். கொண்டாட்டத்தின் வீடியோக்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
லலித் மோடி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இடம் மிகவும் ஆடம்பரமானது. அங்கு குறைந்தபட்ச மேசைக்கான விலை ரூ. 1.18 லட்சம் ஆகும். தப்பியோடிய லலித் மோடி பகிர்ந்துள்ள வீடியோவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள், லலித். புன்னகைகளின் ராஜா" என்ற வரியுடன் பிறந்தநாள் பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோவில், லலித் மோடி நண்பர்கள், பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அரங்கில் கேக் வெட்டி நடனம் ஆடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
What's Your Reaction?

