மீண்டும் மீண்டும் உயரே பறக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ. 53,800.. ஏழைகளுக்கு எட்டாக்கனியா?

வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு சவரன் 54,000 ரூபாயை நெருங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Apr 11, 2024 - 10:27
மீண்டும் மீண்டும் உயரே பறக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ. 53,800.. ஏழைகளுக்கு எட்டாக்கனியா?

தங்கம் இந்திய பெண்களின் முதலீடுகளில் முக்கியமானது. திருமணத்தின் போது மகள்களுக்கு சீதனம் தருவதற்காகவே தங்கத்தை வாங்கி சேகரிப்பார்கள். இந்தியாவில் தினசரியும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. பண்டிகை காலம் இல்லாவிட்டாலும் திருமண முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 50 ஆயிரத்தை எட்டியது.

கடந்த சில நாட்களாகவே தினசரியும் தங்கம் 500 ரூபாய் வரை உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 11) கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,725விற்பனையாகிறது. சவரனுக்கு இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160  உயர்ந்து  ஒரு சவரன் தங்கம் ரூ.53,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 4000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகைக்கடைகளில் ஒரு சவரன் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து 60,000 வரை விற்பனை செய்யப்டும். தங்க நகை விலை உயர்வினால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தங்கத்தின் விலை ஒரு கிராம் 8000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏழைகளுக்கு எட்டாக்கனியாகுமா தங்கம் விலை என்ற ஏக்கம் எழுந்துள்ளது. இதனிடையே வெள்ளியின் விலை இன்றைய தினம் ஒரு கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.50 ஆக விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 குறைந்து ரூ.88,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow