வருமானவரித்துறை அதிரடி... கூடலூரில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் சோதனை.. சிக்கியது என்ன?
உதகமண்டலம் கூடலூரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில் 6 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கூடலூரில் உள்ள கம்மாத்தி பகுதியில் வசித்து வரும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ஏ.ஜே.தாமஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் எதிர்வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், பணப் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வருமான வரித்துறையினர், அரசு ஒப்பந்ததாரர்கள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் கம்மாத்தி பகுதியில் வசித்து வரும் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத்தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான ஏ.ஜே.தாமஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நேற்று இரவு முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை துவங்கிய இந்த சோதனையானது, கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. வருமான வரி மற்றும் சொத்து உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்க பணம் பட்டுவாடா செய்வதற்காக அரசியல் கட்சியினர் வீட்டில் பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம், நகைகள், பரிசுப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?