30 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் மதுரை மாநகரம்
70 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மதுரை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
70 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மதுரை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது...
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை மாநகர் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 9.8 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்ததாகவும் 15 நிமிடங்களில் 4.5 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது. கனமழையால் தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம், முல்லை நகர், ஒத்தக்கடை காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கையை இழந்து பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதேபோல் , ஆலங்குளம் கண்மாயில் இருந்து உபரிநீர் வெளியேறி முல்லை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கால்நடைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து பேட்டியளித்த அப்பகுதி மக்கள், மழை பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு செய்யவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். பண்டிகை நேரத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், மழை பாதிப்பில் இருந்து தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பச்சிழங் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும் வாக்கு கேட்டு மட்டும் வருகிறீர்கள், மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வரவில்லை எனவும் பெண் ஒருவர் ஆவேசத்துடன் பேசினார்.
எம்.பி. சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகர ஆணையர் உள்ளிட்டோர் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பேட்டியளித்த எம்.பி. சு.வெங்கடேசன், மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல் மழை பெய்ததாகவும், மழைநீரை வடியவைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
What's Your Reaction?