மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் த்ரிஷா !! பிரமாண்டமாகத் தயாராகும் விஸ்வம்பரா!!

விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை த்ரிஷா .

Feb 5, 2024 - 17:22
Feb 5, 2024 - 17:27
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் த்ரிஷா !! பிரமாண்டமாகத் தயாராகும் விஸ்வம்பரா!!

After 17 years, Chiru pairs up with Trisha

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி போல டோலிவுட்டில் மெகாஸ்டாராக கலக்குபவர் சிரஞ்சீவி.  வசிஷ்டா, UV  கிரியேஷன்ஸ் இணையும் பிரமாண்ட திரைப்படமான விஸ்வம்பரா  படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகை த்ரிஷாவும்  இணைந்துள்ளார். இது தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு மெகா டிரீட்டாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156-வது படத்திற்கு “விஸ்வம்பரா” என  தலைப்பிடப்பட்டுள்ளது!! | Megastar Chiranjeevi's Mega 156th film is titled  Vishwambhara | Thamizh Padam

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு , ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்திற்காக மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷாவை  தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா இன்று நடந்த  படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார்  சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை த்ரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.  முன்னதாக நடிகை த்ரிஷா, மெகா ஸ்டார்  சிரஞ்சீவியுடன்  “ஸ்டாலின்” என்ற படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும்  “விஸ்வம்பரா” படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

நடிகர் சிரஞ்சீவி பங்கேற்ற 'விஸ்வம்பரா' படத்தின் படப்பிடிப்பு...  ஹைதராபாத்தில் விறுவிறுப்பு! | Start Cut Action: News & Views| Latest Tamil  news | tamil cinema news |Movie ...

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

Read all Latest Updates on and about விஸ்வம்பரா

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீநிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

Megastar Chiranjeevi to shoot for Lucifer Telugu remake from January 20 -  India Today

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க :அருண்ராஜா காமராஜ் படத்தில் விஷ்ணு விஷால் !

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow