"பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும்; அந்த தகுதி உள்ள ஒரே நபர் ........." -  அண்ணாமலை

Annamalai, NarendraModi, Primeminister,Candidate,Election2024,ParliamentElection,BJP, PMModi

Feb 5, 2024 - 17:11
"பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும்; அந்த தகுதி உள்ள ஒரே நபர் ........."   -  அண்ணாமலை

"தாய்ப்பசு மேய்ச்சலுக்குச் சென்று மாலை திரும்பும்போது அதனை எதிர்பார்த்துக் கன்று காத்திருப்பது போல் பாஜக இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் காத்துள்ளது",  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் மேனன், தற்போது தேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின்  அறிவுறுத்தலின்படி இப்போது தமிழகம் வந்துள்ளதாத் தெரிவித்தார்.  

மேலும், 2019 போல இந்த முறையும் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2-வது , 3-வது வாரத்தில்  தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம் எனக் கூறியவர்,  "எந்த ஆங்காரமும் கவுரவுமும் இல்லாமல் அமைதியாக நாம் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்", எனத் தெரிவித்தார். கடந்த 32 வாரமாக உப்பு சப்பற்ற காரணத்திற்கெல்லாம் திமுக பாஜகவினரைக் கைது செய்கிறது என்று விமர்சித்த அவர்,   2024 மே- மாதத்திற்குப் பிறகு எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்காகப் போராடும் இடத்திற்குச் செல்வோம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில்,  "183 தொகுதிகளைத் தாண்டிவிட்டது 'என் என் மக்கள் ' நடைப்பயணம். தமிழகத்தில் எந்த கட்சியும் இவ்வாறு தொகுதி வாரியாக நடைப்பயணம் சென்றதில்லை; மத்திய அரசுத் திட்டப் பயனாளர்களைப் பல தரப்பினரையும் சந்தித்து வருகிறோம்", என்றார். அதோடு, 200 வது தொகுதி சென்னையில் இருக்கும் வகையில்,  பிப்.11 யாத்திரை நடைபெறும் எனவும்  234-வது தொகுதியாகத் திருப்போரூரில் யாத்திரை நிறைவுற்று, பல்லடத்தில் நிறைவு விழா நடக்கும் என்றும் தெரிவித்தார்.  2026 -ல் தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்க உள்ளது என்றும் கூறினார்.

பின்னர் பேசுகையில்,  "ஒரு ஒட்டகத்தால்  எவ்வளவு சுமையைத் தாங்க முடியும், அதன் முதுகில் முழு சுமைகளையும் வைத்த பிறகு கடைசியாக ஒரு குச்சியை வைத்தால் கூட முதுகு உடைந்துவிடும். அதேபோல், ஊழல், குடும்ப, சாதி, அடாவடி அரசியல் தமிழக மக்கள் மீது சுமையாக ஏற்றப்பட்டுள்ளது", என்று விமர்சித்தார்.   "இந்தியாவில் ஒரே பிரதமர்  வேட்பாளர் மோடிதான். பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். அதில் அமர தகுதி உள்ள ஒரே நபர் மோடிதான். ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்காக 11 நாள் விரதம் மேற்கொண்டார் பிரதமர்;  காலையிலும் மதியத்திலும் இளநீர்தான்  அருந்தினார்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ஆட்சி முறையாக நடந்தால் மக்கள் கவர்ச்சிகர தேர்தல் அறிவிப்பை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது பாஜக ஆட்சி மூலம் தெரியவந்துள்ளது. சோற்றினை ஆக்க பொறுத்தோர்... அது ஆறும் வரையும் பொறுக்க வேண்டும்.  "எனவே இதுவரை உழைத்த உழைப்பை இரட்டிப்பு செய்ய வேண்டும். பல தலைவர்கள்  உயிரைக் கொடுத்து உருவான கட்சி பாஜக.  உங்கள் தொழில், குடும்ப நிகழ்ச்சிகளை அடுத்த 75 நாட்களுக்குத் தள்ளி வையுங்கள். உங்கள் நேரத்தை இரட்டிப்பாகக் கட்சிக்குச் செலவிடுங்கள். தேர்தல் வெற்றியைத் தவிர வேறு எதுவும் இப்போது நமக்கு பெரியதில்லை", எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், தமிழக மக்கள் இடையே மாற்று சக்தியாக , மக்கள் மனதை வென்ற கட்சியாக பாஜக மாறியுள்ளதெனக் கூறியவர், வெற்றியின் விளிம்பில் உள்ளது பாஜக என்றும், மறுபடியும் இதுபோன்ற காலம் தமிழக பாஜவினருக்கு  கிடைக்காது எனவும் கூறினார்.  "காலம் நமக்குக்  கனிந்து வந்துள்ளது.  இதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஒருபோதும் நமக்குக் கிடைக்காது" என்றார்.  மேலும், 39 துணை அமைப்புகளுடன் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்தல் பணிக்குழு வில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர் என்றார். 

இதையும் படிக்க   |  ரோந்து காவலர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இருசக்கர வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow