இறுதிக்கட்டத்தில் பவன் கல்யாணின் பீரியட் ஆக்ஷன் படம்.. மாஸ் ரிலீஸுக்கு தயார்
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பீரியட் ஆக்ஷன் படமான ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தப் படம் தயாராகியுள்ளது.
ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் 17ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன் - அட்வென்ச்சர் படமாக தயாராகியுள்ளது. ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதைதான் இது.
சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்றவற்றை பிரமாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் இந்த படம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் டிரைக்டர் நிக் பாவெலின் இயக்கத்தின் கீழ் 400-500 ஸ்டண்ட்மேன்கள் மற்றும் கூடுதல் கலைஞர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.
இதில் நடிகர் பவன் கல்யாண் ரிஸ்க் எடுத்து செய்த ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் விஜயவாடாவில் கடைசி ஷெட்யூல் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் 2025ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முகலாய பேரரசராகவும், நிதி அகர்வால் கதாநாயகியாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?