கஞ்சா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் படி இந்தியாவிலே முதன்முறையாகத் தமிழகத்தில் 49 காவல்துறை அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாகூர் கனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கஞ்சா கடத்தியதாக தன் மீது 2018 ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனக்குச் சொந்தமான ஜீப் வாகனம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும், தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள தனது வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?, எத்தனை வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன?, எத்தனை வாகனங்களைத் திரும்ப உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன? எனக்கேள்வி எழுப்பினார். மேலும், போதை ஒழிப்பு குழு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளாரா எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இதற்குத் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, "தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவின் படி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்தச் சிறப்பு அதிகாரியை மாவட்ட அளவில் நியமனம் செய்ய 'NIBCID நடவடிக்கை எடுத்து வருவதாக எனத் தெரிவித்திருந்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்தியாவில் தமிழ்நாடு முதன்முறையாக மாநில அளவில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசன் மாநில அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி சாம்சன் உள்ளிட்ட 38 காவல்துறை அதிகாரிகள் கஞ்சா போதைப் பொருள் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மற்றும் மாவட்ட அளவில் கஞ்சா போதைப் பொருள் வழக்குகளை விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் 07 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் , 11காவல் உதவி ஆணையர்கள் , 30 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் என 38 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இந்த காவல்துறை அதிகாரிகள் ஒரு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் அதைக் கண்காணிப்பார்கள் எனவும், தொடர்ந்து அந்த வழக்கு முடிந்து தண்டனை பெறுகிறதா? அல்லது விடுதலை பெறுகிறதா? என்பது வரை வழக்கை முழுமையாகக் கண்காணித்து மாநில அதிகாரிக்குத் தகவல் கொடுப்பார்கள் என்றும், அவர்களுக்கு போதிய பயிற்சியும் சுற்றறிக்கையும் வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். இதனைப் படித்துப்பார்த்த நீதிபதி, மாநில அரசின் இந்த முயற்சிக்கு நீதிமன்றம் சார்பாகப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும், "உச்சநீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டில் இது போன்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்து இருந்த நிலையில் வேறு எந்த மாநிலங்களில் இந்த உத்தரவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை; ஆனால், தமிழகத்தில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தி உள்ளது. அரசுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள் எனத் தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் இந்த வழக்கை எவ்வாறு கையாள உள்ளார்களா? எனவும், சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவான அறிக்கையைப் பிப்ரவரி 12 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிக்க | "பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும்; அந்த தகுதி உள்ள ஒரே நபர் ........." - அண்ணாமலை