மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு நாடகம் நடத்தும் டிடிவி தினகரன்... கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி

தன்னை பாதுகாத்துக்கொள்ளவே டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்து, மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு நாடகம் நடத்துவதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம்.

Mar 28, 2024 - 19:43
மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு நாடகம் நடத்தும் டிடிவி தினகரன்... கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி

தன்னை பாதுகாத்துக்கொள்ளவே டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்து, மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு நாடகம் நடத்துவதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி பரப்புரை செய்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்தது. மீண்டும் அதிமுக அரசின் திட்டங்கள் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய கேபி முனுசாமி, "ஜெயலலிதா தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்தபோது மோடியா, லேடியா, என ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். டிடிவி தினகரன் சந்தர்ப்பவாதத்துக்காக, தன்னை பாதுகாத்துக்கொள்ள மோடி உடன் கூட்டணி வைத்துக்கொண்டு மோடியை ஜெயலலிதாவுடம் ஒப்பிட்டு நாடகம் நடத்துகிறார். நாடு முழுவதும் பாஜகவினர் கற்பனை உலகத்தில் மிதக்கிறார்கள். இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்கள் அரசியல் விமர்சகர்கள் மூலமாக 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி மக்கள் மனதில் திணித்து வருகின்றனர்" என்றார்.

மேலும், அதிமுக பாஜக உடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்துக் கேட்டபோது. "திமுக, பாஜக இடையேதான் கள்ளக்கூட்டணி உள்ளது. உதாரணமாக மோடி தமிழகம் வரும் போது கோ பேக் மோடி கருப்பு பலூன் பறக்கவிட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி தமிழகத்திற்கு வந்தபோது வெல்கம் மோடி என சொல்கிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறார்" என்று கே.பி.முனுசாமி விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow