வாழ்வில் வளம் தரும் உகாதி பண்டிகை.. இன்று கொண்டாட்டம்.. முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

உகாதி புத்தாண்டு கொண்டாடப்படும் நல்ல நாளில் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் வளர்ச்சியடையும். தெலுங்கு வருடப்பிறப்பு மட்டுமில்லாமல் உகாதி பண்டிகை இறைவழிபாட்டிற்கும் ஏற்ற நாள் தான். கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் கொண்டாடும் உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

Apr 9, 2024 - 10:49
வாழ்வில் வளம் தரும் உகாதி பண்டிகை.. இன்று கொண்டாட்டம்.. முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

உகாதி என்ற சொல் 'யுகா' என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது. இந்த நாளில் வீட்டை மாவிலை தோரணங்களால் அலங்கரித்து அழகு படுத்துகிறார்கள். இந்த நாள் படைக்கும் கடவுள் பிரம்ம தேவனின் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த புத்தாண்டு தினத்தை உகாதி என தெலுங்கு, கன்னடம் மக்கள் கொண்டாடுகின்றனர். குடி பாடுவா’ என மகாராஷ்டிர மாநில மக்களும், சிந்தி மக்கள் ‘செட்டி சந்த்’ எனவும் புத்தாண்டு திருநாளை கொண்டாடுகின்றனர்.

உகாதி பண்டிகை அல்லது யுகாதி பண்டிகை நாள் இந்த யுகம் தொடங்கிய நாளாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவன் தனது படைப்புத் தொழிலை தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் கன்னட தெலுங்கு மொழி பேசும் மக்கள் உகாதி பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த நாளில் வீடுகளை சுத்தம் செய்து கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும்.

தமிழகத்திலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னடமொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள். வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக் குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப் பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாதமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ்ந்திட காங்கிரஸ் சார்பில் யுகாதி நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில் தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துச்செய்தியில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சு.திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow