தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்? மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் !!

Mar 16, 2024 - 07:35
Mar 16, 2024 - 07:36
தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்? மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் !!

புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கேந்திர வித்யாலயா சங்கதன் மற்றும் நவோதயா வித்யாலயா சமிதி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் 14,500 PM SHRI பள்ளிகளை நிறுவுவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை நேற்று (மார்ச் 15) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள X வலை தளப்பதிவில் "தமிழ்நாட்டில் 2024 - 2025 கல்வியாண்டில் PM SHRI பள்ளிகளை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய கல்வி அமைச்சகத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே கல்வி தொடர்பான வலுவான உறவுகள் ஏற்படும். இந்த பள்ளிகள் மூலம் மாணவர்கள் முழுமையாளன வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டின் இந்த முயற்சியை முழு மனதுடன் வரவேற்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு கூறிய வந்த நிலையில் தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow