தமிழ்நாட்டில் இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது... அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

"பல மாவட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்கும் திட்டங்களைத் தொடங்கிவிட்டோம்"

Mar 15, 2024 - 22:19
தமிழ்நாட்டில் இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது... அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் முழுமையாகக் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் கே.என் நேரு, இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என விளக்கம் அளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம்  கீரனூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையை பொறுத்தவரை குடிநீருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பேசினார்.  கடந்தாண்டு இதே நேரம் 10 டிஎம்சி தண்ணீர் இருந்தது என்று கூறிய அவர், இந்தாண்டு 8.5 டிஎம்சி தண்ணீர் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதும் சீராக தண்ணீர் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார். 

மதுரைக்கு 20 நாட்களுக்குள் 128 எம் எல் டி தண்ணீர் வழங்க உள்தாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். சென்னையில் 150 எம்.எல்.டி கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்தை வழங்கி உள்ளதாகவும் கூறினார். மேலும், பல மாவட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்கும் திட்டங்களைத் தொடங்கிவிட்டோம் என்றும் பேசினார். இதனால் தமிழ்நாட்டில் இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow