பத்ரிநாத்,கேதார்நாத் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை: உத்தரகாண்ட் பாஜக அரசு முடிவு 

பாஜக ஆளும் உத்​த​ராகண்​டின் முக்​கிய புனிதத்தலங்​களாக பத்​ரி​நாத், கேதார்​நாத் கோயில்​களில் இந்துக்கள் அல்லாதோர் வழிபாடு நடத்த தடைவிதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கோயில்​களின் புனிதத் தன்மை பாதிக்கப்படுவ​தாகக் கருதப்​படுகிறது. இதற்​காக பத்​ரி​நாத், கேதார்​நாத் கோயில்களின் நிர்வாகக் கமிட்​டி​ (பிகேடிசி) புதிய தீர்மானம் கொண்​டுவர இருக்​கிறது.

பத்ரிநாத்,கேதார்நாத் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை: உத்தரகாண்ட் பாஜக அரசு முடிவு 
Uttarakhand BJP government decides to ban

இதுகுறித்து பிகேடிசி​யின் தலை​வர் ஹேமந்த் துவேதி கூறுகையில், பத்​ரி​நாத், கேதார்​நாத்​துடன் அதன் துணைக் கோயில்​களி​லும் இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைய முழு​மை​யாக தடை விதிக்​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​படும்” என்​றார்.

இதுகுறித்து உத்​த​ராகண்ட் பாஜக மூத்த தலை​வரு​மான ஹேமந்த் துவேதி கூறுகை​யில், “தேவபூமி​யான உத்​தரா​கண்​டின் மதம் மற்​றும் கலாச்​சார மரபு​களைப் பாது​காப்​பது முக்​கிய கடமை. கேதார் கண்​டம் முதல் மானஸ் கண்​டம் வரையி​லான கோயில் சங்​கி​லி​யில் பாரம்​பரிய​மாக இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைவதற்​குத் தடை இருந்​தது.

ஆனால் உத்​த​ராகண்​டில் பாஜக அல்​லாத அரசின் (காங்​கிரஸ்) ஆட்​சி​யில் இந்த மரபு​கள் மீறப்​பட்​டுள்​ளன. எனவே, இந்த மரபு​கள் முறை​யாகப் பின்​பற்​றப்​படு​வதை உறு​தி​ செய்ய நடவடிக்கை எடுக்​கும் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி பாராட்​டுக்​குரிய​வர். நாட்டின் முதல் மாநில​மாக இங்கு பொது சிவில் சட்​டம் அமலாக்கம், கடுமை​யான கள்​ளநோட்டு தடுப்​புச் சட்​டம் போன்​ற நடவடிக்​கைகளும்​ பா​ராட்​டுக்​குரிய​வை” என்​றார்​.

பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு இந்துக்கள் அல்லாத ஏராளமானோர் சென்று வந்த நிலையில், உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow