Vaadivaasal: சப்ஜெக்ட்டுக்கு இன்னும் உயிர் இருக்கு… சூர்யாவின் வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வெற்றிமாறன், வாடிவாசல் பற்றிய புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை: வெற்றிமாறன் தற்போது விடுதலை 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை முதல் பாகத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் 2ம் பாகமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதனிடையே வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. விடுதலை இரண்டு பாகமாக வெளியாகும் என ஏற்கனவே வெற்றிமாறன் அறிவித்துவிட்டார். ஆனால், இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்கள் இருந்ததால் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வெற்றிமாறன்.
இதனிடையே சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக இருந்ததால், வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதில் இழுபறி நீடித்தது. ஒருகட்டத்தில் சூர்யா ரெடியாகிவிட்டாலும் வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பை இன்னும் முடிக்கவில்லை. இதனால் வெற்றிமாறனுக்காக காத்திருந்த சூர்யா, சுதா கொங்காரவுடன் ஒரு படத்தில் கமிட்டானார். பின்னர் அதுவும் ட்ராப் ஆனதோடு இப்போது பாலிவுட்டில் என்ட்ரியாக ரெடியாகிவிட்டார். அதேபோல் வாடிவாசலில் அமீர் கண்டிப்பாக நடிப்பார் என வெற்றிமாறன் கூறியதால், சூர்யா விலகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
மேலும், சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் இயக்குநர் வெற்றிமாறன். அப்போது வாடிவாசல் திரைப்படம் எப்போது வரும் என வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், விடுதலை 2 ஷூட்டிங் முடிந்ததும் வாடிவாசல் தொடங்கிவிடும் என அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
முன்னதாக வாடிவாசல் படத்திற்காக லண்டனில் கிராபிக்ஸ் வேலை நடந்து வருவதாக வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அங்கு ஜல்லிக்கட்டு காளையை கிராபிக்ஸில் உருவாக்கி வருவதாகவும், முக்கியமான ஆக்ஷன் காட்சிகளில் ஒரிஜினலுக்குப் பதிலாக அது தான் பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனாலும் சூர்யா, அமீர் உள்ளிட்ட வாடிவாசல் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் பலரும், ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?