வாஸ்து டிப்ஸ்: வீட்டில் பூஜை அறை எங்கு இருக்க வேண்டும், எத்தனை மாடி இருக்க வேண்டும்
புதிதாக வீடு கட்டும் போதே அல்லது கட்டியை வீட்டை வாங்கும் போதை பூஜை அறையை எங்கு அமைப்பது, எத்தனை மாடி இருக்க வேண்டும் என வாஸ்து முறைப்படி செய்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
பூஜை அறை எங்கு எந்த திசையில் இருக்க வேண்டும் !
எந்த வீட்டிலும் பூஜை அறை கிழக்குப் பார்த்து இருந்தால் சிறப்பு. ஆனால், எல்லா வீடுகளிலும் கிழக்குப் பார்த்து அறையை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. எனவே, மேற்குப் பார்த்து அமைந்த பூஜை அறைகளும் சிறப்பானவையே.பூஜை அறையில் கடவுளர் உருவங்களோடு சிலைகளையும் வைத்து வணங்கலாமா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். சிலைகளை வைத்து வழிபடுவது தவறில்லை. ஆனால், அவை பின்னப்படாமல் அதாவது விரிசல் ஏதும் விழாமல் சுத்தமாக இருக்கவேண்டும்.பூஜை அறை அமைத்துக்கொள்ள வசதியில்லாதவர்கள், திறந்தவெளியில் கடவுள் படங்களை வைத்து வணங்குவதில் தோஷக் குறைவு எதுவுமில்லை!
மாடி எத்தனை மாடி இருந்தால் நல்லது !
ஒரு வீட்டில் அரசு அனுமதியோடு எத்தனை மாடிகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். முதல் மாடியைப் போலவே அடுத்த மாடியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனைக் கதவுகள், இத்தனை ஜன்னல்கள்தான் வரவேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. ஜன்னல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வரக்கூடாது என்ற கருத்தும் எல்லா இடங்களுக்கும் ஏற்புடையது அல்ல.வெண்டிலேட்டர் இருக்கிறதே... இதுவே போதும் என்று திருப்தி அடையக் கூடாது. அவசியமான இடத்தில் வைக்கும் ஜன்னல் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். பொதுவாக ஒரு ஜன்னலாவது கிழக்கு நோக்கி, வீட்டுக்குள் வெளிச்சம் வரும் வகையில் இருப்பது நல்லது.
ஆரோக்யம் அவசியம்!
பிணியால் வாடி இருப்பது கொடுமையானது. அதுவும் இந்தக் கொடுந்தொற்று காலத்தில் கொரோனா லாக்டவுன், லாக் அப்பை விடக் கொடியதாக இருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் வீட்டில் இருப்பதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நோயுற்றவர்களை தனிமைப்படுத்தும் போது அவர்களுக்கு எந்த அறையை ஒதுக்கலாம்
என்று கேட்பவர்களுக்கு சில ஆலோசனைகள்:
வயதில் பெரியவர்களுக்கு / முதியவர்களுக்கு நைருதி அறை சிறந்தது.நடுத்தர வயதினர் அக்னி, வாயு மூலை அறைகளில் ஓய்வெடுக்கலாம்.வளரும் குழந்தைகளும் இளைஞர்களும் ஈசானிய அறையில் இருக்கலாம்.வீட்டில் அறைகளே இல்லையா? கவலை வேண்டாம். வீட்டின் வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற இடங்களில் கட்டில் போட்டு தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இதனால் பிணியின் தாக்கம் விரைவில் தணியும். ஆரோக்யம் சீராகும்.
What's Your Reaction?

