தமிழக முஸ்லிம்கள் பெரும்பாலும் தந்தையை அத்தா - வாப்பா  என்று எதனால் அழைக்கிறார்கள்?

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தந்தையை அத்தா என்று அழைக்க கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவ்வார்த்தையை பற்றி அறிவீர்களா? 

தமிழக முஸ்லிம்கள் பெரும்பாலும் தந்தையை அத்தா - வாப்பா  என்று எதனால் அழைக்கிறார்கள்?
தமிழக முஸ்லிம்கள் பெரும்பாலும் தந்தையை அத்தா - வாப்பா  என்று எதனால் அழைக்கிறார்கள்?

அத்தா என்ற பழந்தமிழ் சொல் 

இராவுத்தமார்கள் நாங்கள் தந்தையை அத்தா என்று அழைப்போம் அது தொன்மையான தமிழ்சொல். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் தாய்மொழியை பின்பற்றி வாழும் இஸ்லாத்தை பின்பற்றும் சமூகங்கள் உண்டு அவ்வாறு தமிழக நிலப்பகுதியின் கலாச்சாரம் கொண்ட முஸ்லிம் சமூகம்தான் "இராவுத்தர்" என்றழைக்கப்படும் சமூகம்.

அத்தா (ATTHA , ATTAH means FATHER, DADDY, ANCESTOR ) என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் இசுலாமியர்களில் இராவுத்தர்கள் உறவுமுறை சொல்லாகும். அத்தா என்பது தூய தமிழ் மொழியில் தந்தை என்று அழைக்கப்படுகிறது... அத்தன் என்றால் தகப்பன் என்று தமிழில் பொருள். பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். 

அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும். தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ராவுத்தர்கள் தந்தையை அத்தா என்றே அழைக்கின்றார்கள். ஒருவரை மரியாதையாக அழைப்பதற்கு “வாங்கத்தா” வாங்க! அத்தா! என்ற வார்த்தையை கொண்டே அழைப்பது முஸ்லிம் கிராமங்களில் இன்றளவும் வழக்கமாக உள்ளது.

அத்தா என்று தந்தையை அழைக்கும் முறை தமிழ் நாட்டைத் தாண்டி மலேசியா, சிங்கப்பூர் வாழும் தமிழ் முஸ்லிம்களியிடம் வழக்கமாக உள்ளது. இலக்கியம் : "அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.

"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற - சிவ புராணம்

தமிழக முஸ்லிம்கள் தன் தந்தையை அப்பா என்று அழைப்பார்கள் அப்பு என்று அழைப்பார்கள் ஏனென்றால் அரபி வார்த்தையில் தந்தைக்கு அப்பு என்ற பேரு உண்டு அபு அதே மாதிரி தாயே உம்மா உம்மா என்று அழைப்பார்கள் அல்ல உம்மா என்று அழைப்பார்கள் இதுதான் சரியாக இருக்க முடியும் அத்தா என்று அழைப்பவர்கள் தெரியாமல் அது பொருளை தெரிஞ்சுதான் அழைக்கிறார்களா அல்லது தெரியாமல் அழைக்கிறார்களா என்பது மாறுபட்ட கருத்தாக இருக்கிறது 

அத்தா என்பது அதன் வேரோடு புரிகிறது ஆனால் இந்த வாப்பா எங்கிருந்து வந்தது?. கடலோர தமிழ்முஸ்லிம் வீடுகளில் அம்மா என்று அழைப்பதற்குப் பதிலாக உம்மா என்று அழைப்பார்கள். இது பேச்சுவழக்கில் வந்தது. இப்படியானதொரு பேச்சுவழக்குதான் வாப்பா என்பதும்.

அப்பா என்பதை உப்பா என்றும் வூப்பா என்றும் இப்பா என்றும் கேரளாவில் அதிகளவில் சொல்வார்கள். அதையே தமிழ் நாட்டில் வாப்பா என்று சொல்வார்கள். இவை எல்லாமே அப்பா என்ற சொல்லின் பேச்சு வழக்குதானேயன்றி வேறில்லை.

வாப்பா என்று வாய்நிறைய அழைத்தவர்கள் அதிலிருந்து மாறத் தேவையில்லை. ஏனெனில் பேச்சுவழக்கிலிருந்து தமிழுக்குள் வந்த சொற்கள் ஏராளம். அத்தா என்பதும் வாப்பா என்பதும் அரபுச் சொற்களோ உருதுச் சொற்களோ அல்ல அச்சு அசலான பழந்தமிழ்ச் சொற்களே.

சமூக ஊடகங்களில் கிடைத்த தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow