நகை வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி... அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

Aug 14, 2026 - 10:11
நகை வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி... அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (12.08.2026)  தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow