Vijay: ஊர் வாயை அடைத்த விஜய் & சஞ்சய்... அப்பா மகன் வைப் அள்ளுதே... ஆனா இது ஒரிஜினல் தானா..?
விஜய்யும் அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் பேசிக்கொள்வதில்லை என்ற நிலையில், இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை: தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. சமீபத்தில் கூட தனக்கும் சஞ்சய் படத்தில் ஹீரோவாக நடிக்க ஆஃபர் வந்ததாக கவின் கூறியிருந்தார். அதேபோல், துருவ் விக்ரம் உள்ளிட்ட மேலும் சில ஹீரோக்களின் பெயர்களும் லிஸ்ட்டில் உள்ளன.
இந்நிலையில், மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், அப்பாவாக விஜய் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என செய்திகள் வெளியாகின. விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர் தான் லைகா பேனரில் சஞ்சய் படம் இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. அதனால் விஜய்யும் சஞ்சய்யும் நேரில் பார்த்துக்கொள்வதோ பேசிக்கொள்வதோ கிடையாது என தகவல்கள் வெளியாகின. அதேநேரம் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகின.
சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யும் அவரது மகன் சஞ்சய்யும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் எடுத்த செல்ஃபியில் சைலண்டாக போஸ் கொடுத்துள்ளார் விஜய். இதனால் விஜய்க்கும் சஞ்சய்க்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இருவரும் ஒன்றாக தான் இருக்கின்றனர் எனவும் தளபதியின் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். ஆனால், இது ஒரிஜினல் செல்ஃபி இல்லை என தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது, விஜய்யுடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ தான் அதுவாம். அதில், சஞ்சய் இருப்பது போன்று கிராபிக்ஸ் செய்து சிலர் வைரலாக்கி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னடா இது வம்பா போச்சே என தளபதியின் ரசிகர்கள் தலையில் கைவைத்து கண்ணீர் விட்டு வருகின்றனர். மேலும், இது தெரியாமல் விஜய்யும் சஞ்சய்யும் ஒன்றாக இருக்கும் செல்ஃபி போட்டோவுக்கு ரைமிங்காக கேப்ஷன் வைத்து ட்ரெண்ட் செய்து வந்தனர்.
விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார், அதேநேரம் மகன் சஞ்சய் முதன்முறையாக சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், சஞ்சய் சஞ்சய்யும் ஹீரோவாக நடித்தால் செம்மையாக இருக்கும் என தங்களுக்குத் தாங்களே பேசிக் கொள்கின்றனர். அதேபோல், சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பூஜை நிகழ்ச்சி அல்லது படம் வெளியாகும் போது நடக்கும் ஆடியோ லான்ச் போன்ற ஏதேனும் ஒன்றிலாவது விஜய் கலந்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
What's Your Reaction?